Monday, January 4, 2010

அந்தியூர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஓர் சுற்றுலாத்தலம்

மூன்று நாட்கள் விடுமுறை வியாழன் இரவு மாமா வீட்டிற்கு சென்று அங்கு அக்கா குழந்தைகளுடன் இந்த வருடம் ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடினேன் முதன் முறையாக குடும்பத்துடன் புத்தாண்டை (வேறு எதுவும் சாப்பிடமுடியாமல்) கொண்டாடினேன். அடுத்த நாள் காலை புத்தாடை அணிந்து (மாமா வாங்கிக் கொடுத்தது தான்) புகழ் பெற்ற அந்தியூர் பத்ராகாளியம்மன் கோவிலில் தரிசனம் முடித்து விட்டு குடும்பத்துடன் டிவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது குடும்ப நண்பர் மதன் வந்தார். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது மாலை வரட்டுப்பள்ளம் அணைக்குச் செல்லலாமா? என்றார் மாலை வேலைகளில் யானை தண்ணீர் அருந்த வரும் அனைவரும் போகலாம் என்று முடிவு செய்தோம்.
இந்த அணை மேற்கு தொடர்ச்சி மலையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. மதிய உணவிற்குப்பின் நான் வருகிறேன் வரவில்லை என்று சின்ன சின்ன சண்டையுடன் குடும்பம்ன சண்டை இருக்குமில்ல) ஒரு வழியாக புறப்பட்டோம். மாலை நான்கு மணிக்கு புறப்பட்டு வழி எங்கும் இயற்கையை ரசித்துக் கொண்டு சென்றோம். இந்த வரட்டுப்பள்ளம் அனைதான் வீரப்பன் இருக்கும் போது குளிக்க வருவான் என்று ஒரு பேச்சு உண்டு. அதனால் இங்கு அதிரடிப்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது அது இப்போதும் இருக்கிறது.

அந்தியூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்
மேற்கு தொடர்ச்சி மலை எல்லை ஆரம்பம்

காட்டுக்குள் சென்றவுடன் வனத்துறையினரின் செக்போஸ்ட்


மலையில் மக்கள் வசிக்கும் பகுதிகளான பர்கூர் மற்றும் கர்நாடக மாநில ஊர்கலான கர்கேகண்டி,கொள்ளேகால், மைசூர் செல்லும் பாதை இது.


வரட்டுப்பள்ளம் அணைக்குச் செல்லும் காட்டுவழிப்பாதை


வரட்டுப்பள்ளம் அணையின் முகப்பு பகுதி

 
வரட்டுப்பள்ளம் அணையின் மேல் பகுதி
 
 வரட்டுப்பள்ளம் அணையில் தண்ணீர்
 
 கடல் போல் காட்சி அளிக்கும் தண்ணீர்

 
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அணை

 
அணையின் உட்புறத்தோற்றம்
 
விவசாயத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர்

வரட்டுப்பள்ளம் அணை 1980ம் ஆண்டு திறக்கப்பட்டது. இயற்கையான இடத்தில் சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், நல்ல குளிர் என அழகாக அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருபவர்களுக்கு இது அடுத்த சுற்றுலாமையமாகும் யானை,காட்டெறுமை, மான், மயில், கரடி, போன்ற காட்டில் வாழும் விலங்குகள் தண்ணீர் அருந்த வருவதை இயற்கையாக பார்க்க முடியும். இதை அனைத்தையும் ரசித்து விட்டு நாங்கள் திரும்பும் போது 6 மணி ஆகிவிட்டது. இங்கு யாரும் வர மாட்டார்கள் என எண்ணித்தான் நாங்கள் தயக்கத்துடன் சென்றோம் ஆனால் 200பேருக்கு மேல் இங்கு இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்தனர். செலவே இல்லாமல் சுற்றுலா சென்ற திருப்தியுடன் வீடு திரும்பினோம்...

36 comments:

  1. புது இடமாகவும் அமைதியான இடமாகவும் இருக்கே...
    டைம் கிடைக்கும் பொழுது பார்க்கலாம்.

    ReplyDelete
  2. வரட்டுப்பள்ளத்தினை பற்றி அழகான புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பு. படங்களை காணும்போதே அந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது.

    நல்ல இடுகை...

    ReplyDelete
  3. வரட்டுப் பள்ளம் டேம், கோபி பங்களாபுதூருக்கு மேல் இருக்கும் குண்டேறிப்பள்ளம் போன்ற பகுதிகள் மிக அழகானவை. மாலை நேரங்களில் யானைகள் குடிநீருக்காக வரும். பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும்.

    படங்கள் அருமை...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Had you been to banglore from andiyur via kanaka pura?

    I see one route in google map.

    ReplyDelete
    Replies
    1. Kanakapuara, kollegal, kargekandi, Bargur via reach anthiyur

      Delete
  5. சங்கவி,படங்கள் அழகாயிருக்கு.
    ரசனையோட எடுத்திருக்கீங்க.

    ReplyDelete
  6. வாங்க Faizakader..

    //புது இடமாகவும் அமைதியான இடமாகவும் இருக்கே...
    டைம் கிடைக்கும் பொழுது பார்க்கலாம்.//

    நிச்சயம் வாங்க வித்தியாசமான அனுபவத்தை பெறுவீர்கள்....
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  7. வாங்க பாலாசி,
    //வரட்டுப்பள்ளத்தினை பற்றி அழகான புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பு. படங்களை காணும்போதே அந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது.//

    ஈரோட்டில் தானே இருக்கறீங்க ஒரு Week End போய் ரசியுங்க....

    ReplyDelete
  8. வாங்க ஆருரான் சார்...

    //வரட்டுப் பள்ளம் டேம், கோபி பங்களாபுதூருக்கு மேல் இருக்கும் குண்டேறிப்பள்ளம் போன்ற பகுதிகள் மிக அழகானவை. மாலை நேரங்களில் யானைகள் குடிநீருக்காக வரும். பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும்.//

    இன்றைக்கு மாலை பத்திரிக்கையில் தான் படித்தேன் குண்டேறிப்பள்த்தில் யானைகள் கூட்டத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர் என்று அதுவும் ரசிக்கம் இடமே...

    ReplyDelete
  9. வாங்க ஹேமா,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  10. நல்ல பதிவு ... நேரம் வரும்போது பார்த்துடவேண்டியதுதான் ..:)) அதிகம் அறியப்படாத இம்மாதிரி இடங்களை பதிவு செய்யுங்கள்..:)

    ReplyDelete
  11. What a beautiful way to start a new year!
    HAPPY NEW YEAR!

    ReplyDelete
  12. சொல்லவேயில்ல...

    அது எங்க ஏரியாதான் பாஸ்...

    சொல்லியிருந்தீங்கன்னா ஒரு கைடு மாதிரி நானும் வந்திருப்பன்ல...

    ReplyDelete
  13. அழகான இடம். நல்ல புகைப்படங்கள்.

    ReplyDelete
  14. புதுவருடத்தை அழகாக ரசித்து ஆரம்பித்து இருக்கு உங்களுக்கும் உங்க குடும்பத்தினர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  15. நாங்களும் ஒருக்கா வந்துடுரோம்.தலைப்பில் இருக்கும் பிழையை சரி செய்யுங்க பாசு..(தலம்)

    ReplyDelete
  16. அழகான புகைப்படம். ஈரோட்டுக்கு அருகிலேயே இருந்தாலும் இன்னும் பார்த்ததில்லை சங்கவி. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  17. விடுமுறையில் வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும்.. நன்றி

    நான் கோபி தான் :-)

    ReplyDelete
  18. கேள்விப் பட்டதில்லை.வாய்ப்பு கிடைக்கும் போது பாக்கணும்.

    ReplyDelete
  19. "வரட்டுப் பள்ளம் அணை" அழகிய காட்சிகள்.

    ReplyDelete
  20. சுற்றுலா நல்லா இருந்துச்சு!ஆனா யானை ஏன் தண்ணீர் குடிக்க வரல:)

    ReplyDelete
  21. //விடுமுறையில் வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும்.. நன்றி

    நான் கோபி தான் :-)//

    அதுதான் பதிவுலகப் புகழாச்சே!

    இது எப்படியிருக்குதுன்னா ரஜனி என்பேரு ரஜனிங்கிற மாதிரியிருக்குது:)

    ReplyDelete
  22. happy new year
    Pls intimate to aovid plastics and polythenes when visit like this places.

    ReplyDelete
  23. படமும் அழகு, பதிவும் அழகு

    ReplyDelete
  24. நல்ல பகிர்வுக்கு வாழ்த்துகள்.

    கேள்விப்படாத இடமும்,பார்க்க தூண்டும் இடமும் கூட.

    ReplyDelete
  25. வாங்க அகல்விளக்கு

    //அது எங்க ஏரியாதான் பாஸ்...

    சொல்லியிருந்தீங்கன்னா ஒரு கைடு மாதிரி நானும் வந்திருப்பன்ல...//

    பொங்கல் விடுமுறைக்கு பர்கூர், தட்டக்கரை, தாமரக்கரை போகலாம்னு இருக்கேன் நிச்சயம் உங்களை அழைக்கிறேன்...

    ReplyDelete
  26. @ பாலாபட்டறை
    @ கலகலப்ரியா
    @ சித்ரா

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  27. @ ஸ்ரீ
    @ மாதேவி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  28. வாங்க கண்ணகி...
    வாங்க கிரி...
    நீங்க எல்லாம் நம்ம மண்ணுதானா?

    ReplyDelete
  29. @ பின்னோக்கி
    @ பிரியா
    @ தண்டோரா

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  30. @ புஸ்பராஜ்
    @ தமிழ்அமுதம்
    @ பூங்குன்றன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  31. வாங்க ராஜநடராஜன்...

    //சுற்றுலா நல்லா இருந்துச்சு!ஆனா யானை ஏன் தண்ணீர் குடிக்க வரல:)//

    நாங்க போயிருக்கும் போது எப்படிங்க யானை வரும்

    நீங்களும் நம்ம மண்ணுதானா...

    ReplyDelete
  32. மிக நல்ல பதிவு நண்பரே.. கலக்குங்க..

    ReplyDelete
  33. புது இடமா இருக்கு.அவசியம் அங்கிட்டு போனா பாத்துற வேண்டியதுதான்.இந்த மாதிரி புதுப்புது இடங்கள பத்துன தகவல்கள் படித்தும்போது சந்தோசமாக இருக்கு.பகிர்ந்தமைக்கு நன்றி.’butterfly surya'க்கும் நன்றி. உங்க ப்ளாக்க அறிமுகம் செஞ்சத்துக்கு..

    ReplyDelete
  34. அருமையான இடம் நல்லாருக்கும் என்று நினைக்கிறேன் .

    ReplyDelete